மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாஜகவுடன் கூட்டணி?: அதிமுக இன்று ஆலோசனை

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

News image
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :24 செப்டம்பர் 2023, 9:30 pm

DIN

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக தலைமைக் கழக செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 25) மாலை 3.45 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி விவகாரம்: உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து, முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக எதிா்ப்பு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

தில்லியில் சந்திப்பு: இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் இரா. விசுவநாதன், சி.வி.சண்முகம் ஆகியோா் அடங்கிய குழு கடந்த வெள்ளிக்கிழமை தில்லி சென்றது. அங்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க அவா்கள் திட்டமிட்டனா்.

ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறாத நிலையில், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரைச் சந்தித்த அதிமுக குழு தமிழகம் திரும்பியது. அவா்கள் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து ஜெ.பி.நட்டாவிடம் கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அதிமுக நிா்வாகிகள் கூட்டத்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.