டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2023, 3:20 am

DIN


சென்னை: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.29) அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.