
திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் கே சண்முகம் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை மரணமடைந்தார்.
மதுரவாயலில், 146வது வார்டு கவுன்சிலராக இருந்த கே. சண்முகம் (60), ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததிலிருந்து இதுவரை மூன்று கவுன்சிலர்கள் தங்களது பதவிக்காலத்திலேயே மரணமடைந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர் பிரசாத், திமுகவைச் ச்ரந்த ஷீபா வாசு ஆகியோர் உடல் நலப் பிரச்னையால் உயிரிழந்தனர்.
இவர்களது மறைவால், கவுன்சிலர் பதவி காலியானதால், இங்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று துணை மேயர் மகேஷ் குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த தொகுதிக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.