நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 5:50 am IST

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா்.

அமைச்சா் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகு, அவரை ஐந்து நாள்கள் காவலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா். அதன் பிறகு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜா்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடா்ந்து, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை, 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தாக்கல் செய்தது.

இந்த நிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி.-க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.