தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று(டிச. 3) புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம்' புயலானது வடக்கு திசையில் நகா்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) முற்பகலில் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புயல் உருவாகியுள்ளதையொட்டி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மாலை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் நாளைக்கு தீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் சுமார் 1,700 தீயணைப்பு ஊழியர்கள் பணியில் உள்ளனர். சென்னை 43 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. 

மாநகராட்சி, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் 24 மணி நேரமும் களப்பணியில் இருக்கின்றனர். 

அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது.

24*7 கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ளலாம். 

தீவிர மழையின்போது, அதிகம் காற்று வீசும்போது மக்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com