மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்: தமிழக முதல்வர்

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்: தமிழக முதல்வர்

Updated On :21 பிப்ரவரி 2023, 9:32 am

சென்னை: தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,  தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!

தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.

இன்று உலக தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 2000ஆவது ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலகமே, தாய்மொழி நாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் தமிழ் மொழிக்காக தங்களது இன்னுயிரைத் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.