தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 5 பேர் பலி

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 5:16 am

DIN

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜய ராகவன்(41). சென்னை நங்கநல்லூர், இந்து காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

விஜய ராகவன்,மனைவி வச்சலா, தாய் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு, ஆதீர்த் ஆகியோருடன் கேரளாவில் உள்ள கோயிலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். 

திட்டக்குடி அடுத்துள்ள அய்யனார்பாளையம் அருகே வாகன நெரிசல் காரணமாக முன்னால் நின்றிருந்த லாரிக்கு பின்னால் காரை நிறுத்தியிருந்தார். அப்போது, பின்னால் வந்த  லாரி மோதியதில், இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி காரில் சிக்கியிருந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், மதுரையில் உள்ள வீரராகவனின் தங்கை வசுதாரணிக்கு தகவல் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.