தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் மாற்றம்!

சென்னை சென்டரல் - அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக  சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2023, 8:46 am IST

சென்னை சென்டரல் - அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக  சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 21.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43130) செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூன் 6,8) ஆவடியுடன்   நிறுத்தப்படும். ஆவாடி - சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43932) புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 7,9) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். அரக்கோணம் - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 8.25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43794) வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43132) வியாழக்கிழமை (ஜூன் 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

முழுமையாக ரத்து: சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43001) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43801) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் (வண்டி எண்கள்: 66007,43025) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.