தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:43 am

DIN

ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கம் முன்பு சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆவினுக்கு பால் விற்பனை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பால் உற்பத்தியாளர்களின் அதிகரித்து வரும் உற்பத்தி செலவை சமாளிக்க உதவும் வகையில், பசும்பால் விலையை 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டருக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்த சங்கம் கோரியது. அதுவரை ஆவினுக்கு பால் வழங்காமல்  17 தேதி முதல் போராட்டம் நடத்த அறிவித்தது. 

ஈரோடு மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ஆவின் ஆரம்ப பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, நாளொன்றுக்கு, 3.5 லட்சம் லிட்டர் பால் ஆவின் பெறுகின்றது. இப்போது, ​​சங்கத்தின் போராட்டம் காரணமாக, வரத்து இன்று கிட்டத்தட்ட 50 சதவீதமாக குறைந்தது. 

ஈரோடு அருகேயுள்ள நசியனூரில் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காலை கறவை மாடுகளுடன் மறியல் செய்தனர். பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாசருடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, பால் விலையை உயர்த்தக் கோரி, பாலை சாலையில் கொட்டி முழக்கங்களை எழுப்பினர். 

தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்கக் கூடாது என்ற போராட்டம் தொடரும் என சங்கப் பொருளாளர் ராமசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.