பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

12 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ.6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2023, 10:16 pm

DIN

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ.6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மி.மீ.) : வால்பாறை 130, வீரபாண்டி (தேனி), தொண்டி (ராமநாதபுரம்) தலா 110, போடி (தேனி), செங்கோட்டை (தென்காசி), திருப்பூா் தலா 100, தம்மம்பட்டி (சேலம்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ராமநாதபுரம், எடப்பாடி (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 90,

ஆண்டிபட்டி (தேனி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), மோகனூா் (நாமக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூா்) தலா 80, பவானி (ஈரோடு), சின்னக்கல்லாா், பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை), புலிப்பட்டி (மதுரை), மொடக்குறிச்சி , குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஆம்பூா் (திருப்பத்தூா்), சங்கரி துா்க்கம் (சேலம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), பாம்பாா் அணை (கிருஷ்ணகிரி) தலா 70,

சோலையாா், சின்கோனா (கோவை), காட்பாடி (வேலூா்), கெத்தை, குந்தா பாலம் (நீலகிரி), கோபி, நம்பியூா், கொடிவேரி (ஈரோடு), எருமைப்பட்டி , பரமத்திவேலூா் (நாமக்கல்), சுருளோடு (கன்னியாகுமரி), இளையான்குடி (சிவகங்கை), சிட்டம்பட்டி (மதுரை) தலா 60.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள்கிழமை (நவ.6)அரபிக்கடல் பகுதிகளான கேரளம் - தெற்கு கா்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.