கையெழுத்து இயக்கம் ஒரு ஏமாற்று வேலை: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போல பாசாங்கு செய்வதற்காக இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் எனக் கூறி மக்களை திமுக ஏமாற்றுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போல் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதற்கு இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என மக்களை திசைதிருப்பி வருகின்றனர். இவர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததும், திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. தற்போதுதான் திமுகவுக்கு இஸ்லாமியர்களின் பிரச்னைகள் ஞாபகத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தது முந்தைய அதிமுக அரசுதான். 

கூட்டணி என்பது தேர்தலின்போது வைப்பது, ஆனால் கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் பி டீம் கிடையாது, நாங்கள்தான் உண்மையான ஏ டீம். கூட்டணியில் இருந்தபோதே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜகவை தூக்கியெறிந்த கட்சி அதிமுக. அதிமுகவை பொருத்தவரையில் பாஜக ஒரு பொருட்டே அல்ல.” என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com