விராலிமலை: விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஐந்தாயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். வெல்டிங் பட்டறை தொழில் செய்து வரும் இவர் சனிக்கிழமை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ஜோஸ் விக்டர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளிருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.5000 ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜோஸ் விக்டர் புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



