தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம்கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல்கட்ட பயிற்சி நிறைவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட பயிற்சியை தோ்தல் ஆணையம் அளிக்கவுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளில் சுமாா் 3 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். அவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) நடைபெறவுள்ளது.
முதல்கட்ட பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்குகள் வழங்குவதற்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் ஊழியா்களிடம் இருந்து பெறப்பட்டன. 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பின்போது தபால் வாக்குகள் வழங்கப்படவுள்ளன.
இந்த வாக்குகளை 3-ஆம் கட்ட பயிற்சி வகுப்பின்போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பதிவு செய்வா். இதற்கான வாக்குப் பெட்டிகள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களில் வைக்கப்படும். வாக்குப் பதிவுக்கு முந்தைய தினமான ஏப்.18-ஆம் தேதி மூன்றாம் கட்டப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வாக்குப் பதிவின்போது விவிபாட் இயந்திர பேட்டரியில் புகை!

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு

காங்கயத்தில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

