சென்னை - திருவண்ணாமலை இடையே ரயில் சேவை! விரைவில்

திருவண்ணாமலை வரை ரயில் சேவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது!
சென்னை - திருவண்ணாமலை இடையே ரயில் சேவை! விரைவில்

தெற்கு ரயில்வே, தாம்பரம் - ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் - தனபூர் பகுதிகளுக்கு இடையே நாள்தோறும் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இதற்கிடையே, திருநெல்வேலி, நாகை மற்றும் இதர பகுதிகளுக்கும் வாராந்திர ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - வேலூர் பயணிகள் ரயிலையும் சென்னை கடற்கரை - விழுப்புரம் பயணிகள் ரயிலையும் திருவண்ணாமலை வரை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - திருவண்ணாமலை இடையே ரயில் சேவை! விரைவில்
கரோனாவைவிட 100 மடங்கு மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்! நிபுணர்கள் எச்சரிக்கை

புதிய ரயில்களை இயக்க, இருக்கும் ரயில் சேவையை நீட்டிக்க, ரயில் சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க என பல்வேறு பரிந்துரைகள் ரயில்வே வாரியத்திடம் சில மாதங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்டது. கால அட்டவணைக் குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஏப்ரல் 2 தேதியிட்ட தெற்கு ரயில்வேயின் பிரிவுக்கு வந்த கடிதத்தில், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுமாறு கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை முக்கிய கோயில் தளமாகவும் சுற்றுலாத்தலமாக இருந்தாலும், சென்னையிலிருந்து நேரடி ரயில் வசதி இல்லை. பயணிகள் திருவண்ணாமலைக்கு ரயிலில் சென்னையிலிருந்து செல்ல வேண்டுமானால், 61 கி.மீ., தொலைவில் உள்ள விழுப்புரம் வரை செல்ல வேண்டும்.

சென்னை - திருவண்ணாமலை இடையே ரயில் சேவை! விரைவில்
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இதனால்தான், சென்னை கடற்கரை வேலூர் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க பல ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது போதுமான பெட்டிகள் இல்லாததால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. “இந்த முறை, வேலூர் அல்லது விழுப்புரத்தில் இருந்து வரும் மின்சார ரயில்கள், அல்லது இரண்டிலும், செயல்பாட்டு சாத்தியக்கூறுகளைப் பொறுத்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படலாம். ரயில்வே வாரியத்திடம் அனுமதி கிடைத்ததும், புதிய ரயில் சேவைகள் தொடங்கப்படும்,'' என்கிறார்கள்.

கோயம்புத்தூரில் இருந்து திருச்சி மற்றும் பாலக்காடு வழியாக தாம்பரம், திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில், நாகர்கோவிலில் இருந்து லோகமான்ய திலகர் ரயில் முனையம் (மும்பை அருகே குர்லா), திருநெல்வேலி - ஜோத்பூர், தாம்பரம் - சந்த்ரகாசி, ராமேஸ்வரம் - மால்டா ஆகிய வழித்தடங்களிலும்ட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய ரயில்கள் இயக்கக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com