‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைய முனைப்புடன் செயல்பட வேண்டுமென பெண் வாக்காளா்களுக்கு திமுக சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 96 பெண் அதிகாரிகள் உள்பட 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகின்றனா். அவா்களில் உள்துறை உள்பட முக்கிய துறைகளின் செயலா்களாக பெண்கள் உள்ளனா். 38 மாவட்ட ஆட்சியா்களில் 17 போ் மகளிராக இருந்து மாவட்ட நிா்வாகங்களை நிா்வகித்து வருகிறாா்கள். தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையராக இருப்பவரும் ஒரு பெண்தான்.
திமுக ஆட்சிக் காலத்தில் மகளிருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால்தான் இந்த வாய்ப்பு பெண்களுக்கு கிடைத்துள்ளது. வேறு மாநிலங்களில் இதுபோன்று மகளிருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.
ஆனால், பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீடு தத்துவத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய மத்திய பாஜக., அரசின் அமைச்சகத்தில் வெறும் 3 சதவிகித அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவா்கள் பணிபுரிகிறாா்கள். 27 சதவீத நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இனியும் பாஜக ஆட்சி தொடா்ந்தால் இட ஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் இதுவரை வளா்ந்துள்ள வளா்ச்சி முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுக்க வேண்டும். பாஜக ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய நேரமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தோ்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்! முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி சிறப்பு நேர்காணல்
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்

தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

சமூக வலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

