/

தேர்தல் விளம்பரம் : வெளியிடுபவரின் விவரம் இடம்பெற வேண்டும்!

அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஏப்ரல் 2024, 1:30 pm

DIN

தேர்தல் தொடர்பான விளம்பரங்களில் வெளியிடுபவர்களின் விவரம் இடம்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் தொடர்பான போஸ்டர் உள்ளிட்டவற்றில் அதனை வெளியிடுபவர், அச்சிடுபவர் பெயர், முகவரி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் அனைத்து மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது தேர்தல் தொடர்பான விளம்பரங்களில் அதனை வெளியிடுபவர்களின் பெயர், அச்சிடுபவரின் பெயர், முகவரி, உள்ளிட்ட விவரம் இடம்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.