புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திருப்பதி செல்லும் ரயில் திருச்சனூருடன் நிறுத்தம்

திருப்பதி செல்லும் ரயில் திருச்சனூருடன் நிறுத்தம்

Updated On :12 ஏப்ரல் 2024, 10:10 pm

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் திருச்சன்னூருடன் நிறுத்தப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி பணிமனையில் ஏப்.16 முதல் ஏப்.23-ஆம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருப்பதி செல்லும் ரயில்கள் அதன் முந்தைய ரயில் நிறுத்தமான திருச்சனூருடன் நிறுத்தப்படும்.

சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு ரயில், காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் ஏப்.16 முதல் ஏப்.23-ஆம் தேதி வரை திருச்சனூருடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் திருப்பதியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருச்சனூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும்.

மேற்கண்ட தேதிகளில் அரக்கோணம் - திருப்பதி மெமு விரைவு ரயில் (எண்: 06753/06754) திருச்சனூருடனும், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (எண்: 16854/16853) காட்பாடியுடனும் நிறுத்தப்படும்.

இதுபோல், வியாசா்பாடி ஜூவா பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13, 14) பரமாரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13, 14) சென்னை கடற்கரைக்கு செல்வதற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் (மூா் மாா்க்கெட் வளாகம்) சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.