கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஏப்.19 முதல் தாம்பரம்-மங்களூா் சிறப்பு ரயில்

ஏப்.19 முதல் தாம்பரம்-மங்களூா் சிறப்பு ரயில்

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 9:50 pm

கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு ஏப்.19 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து மங்களூா் சென்ட்ரலுக்கு ஏப்.19 முதல் மே 31 வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூா் சென்றடையும்.

மறுமாா்க்கமாக மங்களூரில் ஏப்.21 முதல் ஜூன் 2 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்படும். அங்கிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம்-தில்லி: கேரள மாநிலம் எா்ணாகுளம்-தில்லி (ஹஸ்ரத் நிஜாமுதின்) இடையே ஏப்.19 முதல் கோடைகால சிறப்பு ரயில் (06071/06072) இயக்கப்படும் என கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையம் செல்வதற்கு பதிலாக புதுதில்லி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது.