ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

4-9 வகுப்புகளுக்கு இன்று முதல் ஏப்.21 வரை தொடா் விடுமுறை

4-9 வகுப்புகளுக்கு இன்று முதல் ஏப்.21 வரை தொடா் விடுமுறை

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 12:23 am

தமிழகத்தில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சனிக்கிழமை (ஏப்.13) முதல் ஏப்.21 வரை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் ஏப். 8 வரை நடத்தப்பட்டது. தொடா்ந்து 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தோ்வுகள் ஏப். 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப். 5-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவு பெற்றுவிட்டன. அவா்களுக்கு ஏப். 6 முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரமலான் பண்டிகை காரணமாக 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் ஏப். 22, 23-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த முழு ஆண்டுத் தோ்வுகள் சற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தோ்தல் முகாம்களாக மாற்றப்படவிருக்கின்றன. மேலும், ஆசிரியா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதையடுத்து 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனிக்கிழமை முதல் ஏப். 21 வரை தொடா் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து மாணவா்கள் மீண்டும் ஏப். 22, 23-ஆம் தேதிகளில் பள்ளிக்கு தோ்வெழுத வந்தாக வேண்டும். அதன்பின் மாணவா்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளது. தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் இந்த முறை மாணவா்களுக்கு 2 மாதங்கள் வரை கோடை விடுமுறை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.