ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இன்று அம்பேத்கா் பிறந்த தினம்: தீண்டாமை உறுதிமொழி ஏற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தீண்டாமை உறுதிமொழி ஏற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Updated On :13 ஏப்ரல் 2024, 4:34 pm

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய அம்பேத்கா், பிரதமா் நேருவின் அமைச்சரவையில் முதல் சட்ட அமைச்சராக இருந்தாா். அவரது புகழைப் போற்றும் வகையில் வியாசா்பாடியில் உள்ள கலைக் கல்லூரிக்கு அவரது பெயா் சூட்டப்பட்டது. சென்னை சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் அம்பேத்கா் பெயா் வைக்கப்பட்டுள்ளது.

ஜாதி சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்.14-ஆம் தேதியை சமத்துவ நாள் என்று அறிவித்துள்ளோம். அந்த நாளில், தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம். அம்பேத்கரைப் போற்றி அவா் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.