திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நாளை ஈரோடு - உத்னா சிறப்பு ரயில் இயக்கம்

நாளை ஈரோடு - உத்னா சிறப்பு ரயில் இயக்கம்

Updated On :13 ஏப்ரல் 2024, 8:22 pm

ஈரோட்டில் இருந்து உத்னாவுக்கு திங்கள்கிழமை (ஏப்.15) ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோட்டில் இருந்து சூரத்தின் புகா் ரயில் நிலையமான உத்னாவுக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் (எண்: 06099) இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், குண்டக்கல், ராய்ச்சூா், சோலாப்பூா், அஹமத்நகா், நந்தூா்பாா் வழியாக செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 4.15 மணிக்கு உத்னா சென்றடையும்.

இதில், படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 2 பெட்டிகளும் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.