பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

பெயர் மட்டுமா என்ன? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!
பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுவது மட்டுமே இதுவரை பிரச்னையாக இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவரது சின்னமுமே பிரச்னையாக இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே போட்டியிடும் 5 பன்னீர்செல்வமும், ஓபிஎஸ் என்று தங்களை அடையாளப்படுத்தி பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள். அதில் அவர்களது சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

அதாவது, ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, ஒரு சுயேச்சை பன்னீர்செல்வத்துக்கு திராட்சையும், மற்றொரு பன்னீர்செல்வத்துக்கு பக்கெட் சின்னமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், வயதான முதியவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்றுமே ஒன்றுபோலத்தான் தெரியலாம் என்பதே.

இதில் அனைவருமே ஓபிஎஸ் என்று போஸ்டர் அடித்தால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சின்னம் எது என்று கூட சில வாக்காளர்களுக்குத் தெரியாமல் போய்விடும் நிலையும் உள்ளது.

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!
மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

அதனாலேயே, தேர்தல் பிரசாரத்தின்போது, பலாப்பழ சின்னத்துடன் ஓபிஎஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே, அதிமுகவின் எதிரி என்பதுபோல பரப்பப்படும் விமர்சனம், பெயர் பிரச்னை, சின்னம் பிரச்னை என பல தடைகளை ஓபிஎஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

துண்டு பிரசுரங்கள் எல்லாம் பெரிய அளவில் கவனம் ஈர்க்காது என்றாலும் நேரடியாக வாக்காளர்களிடம் வேட்பாளர் பெயர், சின்னத்தைக் கொண்ட சேர்ப்பது இதுதான் என்பதால் ஓபிஎஸ் சற்று கவலைப்படத்தான் வேண்டியுள்ளது.

எல்லாவற்றையும் தாண்டி ஓபிஎஸ் வெற்றிபெறுவார் என்றே அவரது தரப்பு நம்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com