போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள் என்று செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

விழுப்புரம்: தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம் பிகை ஆரம்பப் பள்ளியில தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து செளமியா அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது :

தருமபுரி மக்களவைத் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .குறிப்பாக பெண்களிடம் பாமகவுக்கு அமோக வரவேற்புள்ளதால் எனது வெற்றி உறுதியாகியுள்ளது.

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி
தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே எனது சகோதரர்கள்தான், ஜனநாயக முறைப்படி நடைபெறும் இத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி எனது வாக்கினைப் பதிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமார், பாமக மாவட்டச் செயலர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com