தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் பணிக்கு கூடுதலாக அழைத்து வரப்பட்டு ஒசூரில் தங்கவைக்கப்பட் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு அலுவலர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மாற்று அலுவலர்கள் நியமிப்பதற்காக ஒசூர் ஆந்திர சமிதியில் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் வியாழக்கிழமை இரவு முதல் ஆந்திர சமிதியில் தங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் போதுமான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யாததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர சமிதியில் இரவு முழுவதும் தங்கியிருந்த ஆசிரியர்கள், அங்கு ஒரே ஒரு கழிப்பிட வசதி மட்டுமே இருந்தது. 250க்கும் மேற்பட்டோர் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் குளிக்கவோ காலை கடனை கழிக்கவோ மிகவும் அவதியுற்றனர்.

அதேபோன்று இரவு முழுவதும் குடிநீர் வசதி கூட அங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. காலையில் சிற்றுண்டி இல்லாமல் காலை 10 மணி வரை ஆசிரியர்களுக்கு உணவு வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் மிகவும் அவதியுற்றனர் .இந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com