அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 78.16% வாக்குப்பதிவு

News image
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ச.உமா.
Updated On :20 ஏப்ரல் 2024, 3:46 am

DIN

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 78.16 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில், மொத்தமாக 14,52,562 வாக்காளர்கள் 1,661 வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாக்குப்பதிவு நிறைவுக்கு பின் இரவு 7 மணி நிலவரப்படி 74.29 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நள்ளிரவு 12 மணி அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி ச.உமா இறுதி நிலவரத்தை வெளியிட்டார். அதன்படி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்: சங்ககிரி–81.75 சதவீதம்.

ஆண்கள் - 1,11,814, பெண்கள் - 1,08,316, இதரவை - 8, மொத்தம் - 2,20,138.

ராசிபுரம்–81.59 சதவீதம்.

ஆண்கள் - 92,458, பெண்கள் - 95,663, இதரவை - 4, மொத்தம் - 1,88,125.

சேந்தமங்கலம்–78.08 சதவீதம்.

ஆண்கள் - 92,797, பெண்கள் - 97,792, இதரவை - 3, மொத்தம் - 1,90,592.

நாமக்கல்–74.32 சதவீதம்.

ஆண்கள் - 91,390, பெண்கள் - 1,00,274, இதரவை - 14, மொத்தம் - 1,91,678.

பரமத்தி வேலூர்–77.26 சதவீதம்.

ஆண்கள் - 80,602, பெண்கள் - 89,576, இதரவை - 2, மொத்தம் - 1,70,180.

திருச்செங்கோடு–75.75 சதவீதம்.

ஆண்கள் - 84,607, பெண்கள் -89,904 இதரவை - 23, மொத்தம் - 1,74,533.

நாமக்கல் மக்களவைத் தொகுதி: 78.16 சதவீதம்.

ஆண்கள் - 5,53,668, பெண்கள் - 5,81,865, இதரவை - 53, மொத்தம் - 11,35,246.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.