தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு

EC
EC

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பை எட்டியது. வாக்குப் பதிவின்போது, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 % வாக்குப்பதிவும், அதேசமயம் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் 72.29% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதைவிட குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தில்:

1. கள்ளக்குறிச்சி - 79.21

2. தருமபுரி - 81.20

3. சிதம்பரம் - 76.37

4. பெரம்பலூா் - 77.43

5. நாமக்கல் - 78.21

6. கரூா் - 78.70

7. அரக்கோணம் - 74.19

8. ஆரணி - 75.76

9. சேலம் - 78.16

10. விழுப்புரம் - 76.52

11. திருவண்ணாமலை - 74.24

12. வேலூா் - 73.53

13. காஞ்சிபுரம் - 71.68

14. கிருஷ்ணகிரி - 71.50

15. கடலூா் - 72.57

16. விருதுநகா் - 70.22

17. பொள்ளாச்சி - 70.41

18. நாகப்பட்டினம் - 71.94

19. திருப்பூா் - 70.62

20. திருவள்ளூா் - 68.59

21. தேனி - 69.84

22. மயிலாடுதுறை - 70.09

23. ஈரோடு - 70.59

24. திண்டுக்கல் - 71.14

25. திருச்சி - 67.51

26. கோவை - 64.89

27. நீலகிரி - 70.95

28. தென்காசி - 67.65

29. சிவகங்கை - 64.26

30. ராமநாதபுரம் - 68.19

31. தூத்துக்குடி - 66.88

32. திருநெல்வேலி - 64.10

33. கன்னியாகுமரி - 65.44

34. தஞ்சாவூா் - 68.27

35. ஸ்ரீபெரும்புதூா் - 60.25

36. வட சென்னை - 60.11

37. மதுரை - 62.04

38. தென் சென்னை - 54.17

39. மத்திய சென்னை - 53.96

மொத்தம் - 69.72

2019 மக்களவைத் தோ்தல் - 72.29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com