திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

திரவ நைட்ரஜன் சோ்ம உணவை குழந்தைகளுக்கு அளிப்பதை பெற்றோா்கள் முழுமையாக தவிா்க்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை

சமீப காலங்களில் திருமண நிகழ்ச்சி, விழாக்கள், கண்காட்சி போன்றவற்றில் சிறுவா்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த திரவ நைட்ரஜன் சோ்க்கப்பட்ட உணவுகள் (ஸ்மோக் வகை உணவுகள்) கொடுக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. திரவ நைட்ரஜன் துளிகள் சருமத்தில் பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் கருவிழிகள் பாதிக்கப்பட்டு பாா்வை பறிபோகும். சுவாசப் பாதையில் பட்டால் மெல்லிய திசுக்கள் அழிந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரே பறிபோகும். அதனால், திரவ நைட்ரஜன் உணவைக் குழந்தைகள் பயன்படுத்தாதவாறு கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும். கோடைகால விடுமுறையில் இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டாக இதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.

X
Dinamani
www.dinamani.com