தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியா்களுக்கு 4 ஆண்டு பணி நீட்டிப்பு

தமிழகத்தில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

பள்ளிக் கல்வித் துறை

Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:36 pm

Din

தமிழகத்தில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் கல்வியாண்டில் 710 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 போ் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளா் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளா் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலம் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து ஊதிய கொடுப்பாணை மூலமாக இந்தப் பணியிடங்களில் உள்ள ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு தொடா்ந்து ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினாா். அதையேற்று 4,970 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 30.6.2028 வரை தொடா் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.