ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விழுப்புரத்தில் பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றம் -முழு விவரம்

விழுப்புரம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் குறித்து...

News image
கோப்புப்படம்- Din
Updated On :19 ஆகஸ்ட் 2024, 9:56 am

DIN

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் இடையேயான மெமு ரயில், இரு வழித்தடங்களிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவாரூரில் இருந்து விழுப்புரத்துக்கு மாலை 3.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில்(06690) செப். 1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

1. ரயில் எண். 17655, காக்கிநாடா - புதுச்சேரி விரைவு ரயில், செப். 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப். 2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவுக்கு பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும்.

2. ரயில் எண். 17653, காச்சிகூடா - புதுச்சேரி விரைவு ரயில், செப். 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப். 2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காச்சிகூடாவுக்கு பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும்.

3. ரயில் எண். 22673, பகத் கி கோதி - மன்னார்குடி அதிவிரைவு ரயில், ஆக. 29ஆம் தேதி விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

4. ரயில் எண். 06025, சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு ரயில், ஆக. 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில் முண்டிப்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

5. ரயில் எண். 16868, திண்டுக்கல் - விழுப்புரம் விரைவு ரயில், ஆக. 31 மற்றும் செப். 2 ஆகிய தேதிகளில் விருதாச்சலத்துடன் நிறுத்தப்படும். மீண்டும் விருதாச்சலத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும்.

6. ரயில் எண். 16111, திருப்பதி - புதுச்சேரி மெமு விரைவு ரயில், ஆக. 31 மற்றும் செப். 2 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும்.

7. ரயில் எண். 06697, காட்பாடி - விழுப்புரம் மெமு ரயில், செப். 1ஆம் தேதி வெங்கடேஷபுரத்துடன் நிறுத்தப்படும்.

8. ரயில் எண். 06699, காட்பாடி - விழுப்புரம் மெமு ரயில், செப்.1ஆம் தேதி வெங்கடேஷ்புரத்துடன் நிறுத்தப்படும்.

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.