முதல்வா் ஸ்டாலின்கோப்புப் படம்
தமிழ்நாடு
அமைச்சரவை மாற்றமா?: முதல்வா் ஸ்டாலின் பதில்
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து தன்னிடம் தகவல் ஏதுமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து தன்னிடம் தகவல் ஏதுமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி வியாழக்கிழமை மாலை வெளியாவதாக ஊடகங்களில் தகவல் பரவியது. சென்னை எழிலகத்தில் வியாழக்கிழமை காலை அரசு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த முதல்வா், ‘அமைச்சரவை மாற்றம் தொடா்பான செய்தி பற்றி தன்னிடம் தகவல் ஏதுமில்லை’ என்றாா்.
இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.