அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி.. தவெக பாடல் வரிகள் முழுவதும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் வைரலாகி வருகிறது
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி.. தவெக பாடல் வரிகள் முழுவதும்!
x / TVK
Published on
Updated on
2 min read

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் "தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பிறக்குது" எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது.

பாடலில் அனைவருக்கும் புரியும்படியான எளிய தமிழ்ச்சொற்களால் பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும், தமன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனமே மனமே வா வா நிஜமே

கொடியே கொடியே காவல் கொடியே

தலைவா தலைவா காவல் தர வா

வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதி மாறுது

வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது

வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதி மாறுது

வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது

தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது

மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது

தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது

மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..

சிறுசும் பெருசும் ரசிக்குது.. சிங்கப் பெண்கள் சிரிக்குது

மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது

மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது

மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது

சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு

நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது

தமிழா தமிழா நம்ம வாழ போறமே

ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே

தமிழா தமிழா நம்ம வாழ போறமே

ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே

தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி

தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி

ரத்த சிவப்பில் நிறமெடுத்தோம்.. ரெட்டை யானை பலம் கொடுத்தோம்

நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி, கொடியின் உருக் கொடுத்தோம்

மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்.. பச்சை நீலத் திலகம் வச்சோம்

பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறையடிச்சோம்

தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது

தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது

அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி

அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி

தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி

தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி

வெற்றி வாகை சூடப்போற விஜயக் கொடி மக்கள் கொடி

தமிழன் கொடி பறக்குது!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கொடிப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கொடியில் சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில், நீலம் மற்றும் பச்சை வண்ண நட்சத்திர வடிவங்களும், 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி.. தவெக பாடல் வரிகள் முழுவதும்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com