மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு
மேலூர் அருகே அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.


மேலூர் அருகே அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலுக்கு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
பின்னர், ஶ்ரீகள்ளழகர் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, அழகர்கோயிலில் காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் தரிசனம் செய்தார். அப்போது கருப்பணசாமி கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவாள் வழங்கினார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் அழகர்கோயிலுக்கு வந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து அவரைக் கண்டதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் போட்டி போட்டு அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...