ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலில் மதுரை - சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது. கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்த நிலையில், பயணிகளுக்கு தூய்மையான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதன்படி, முதன்முறையாக மதுரை கோட்டத்தில் உள்ள பாண்டியன் விரைவு ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
துணி உறைகள், கம்பளிப் போர்வை உள்ளிட்டவை முறைப்படி (வெல்கிரோ ஒட்டும் முறை) ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும்.
இதையும் படிக்க | புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


