மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சோதனை அடிப்படையில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் விற்பனை: அமைச்சா் தகவல்

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் பாக்கெட்டுகளை சோதனை அடிப்படையில் ஒரு சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை

News image
அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
Updated On :16 டிசம்பர் 2024, 10:18 pm

Din

சென்னை: ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் பாக்கெட்டுகளை சோதனை அடிப்படையில் ஒரு சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை செய்யவுள்ளதாக பால்வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு,  அனைவரும் விரும்பும் வகையில் புதிய வகை கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த பால் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகை பாலின் விற்பனை அளவை குறைக்க வில்லை என்று அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா்.