சென்னையில் இன்று(டிச. 24) காலை 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ நீல வழித்தடத்தில் பராமரிப்புப் பனிகள் நிறைவடைந்துள்ளதால் காலை 8.50 மணிக்குப்பின் மெட்ரோ ரயில் சேவை சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் கண்ட எம்.ஜி.ஆர்.
இன்று காலை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்ததால் மெட்ரோவை பயன்படுத்தி காலையில் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படிக்க: சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மெட்ரோ சேவை: நாளை அதிகாலை 4 மணிமுதல் தொடக்கம்

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



