ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தில்லியில் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி.

Published On :

மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு உரிய இடம் தராமல் மத்திய அரசு அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குடும்பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது. இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.

அவரது குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது, அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும்.

டாக்டர் மன்மோகன் சிங் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது. இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.