டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

3வது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்பும்! தலைமை பொறியாளர்

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாகஇன்று மாலை நிரம்பும் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தகவல்.

News image
மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்- தினமணி
Updated On :31 டிசம்பர் 2024, 5:07 am

DIN

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று (டிச. 31) மாலை நிரம்பும் என திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அணை நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.87அடியிலிருந்து 119.97அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.42 டிஎம்சியாக உள்ளது. (அணையின் மொத்த நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகும்)

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதன் முறையாக நிரம்பியது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிரம்பியது.

நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை

நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை

இன்று மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் இன்று காலை நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.

 மேட்டூர் அணையில் ஆய்வு  மேற்கொண்ட அதிகாரிகள்

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

அணையின் வலது கரை, இடது கரை ஆய்வு சுரங்க பகுதி ஆகியவற்றை பார்வைத்தார். மேட்டூர் அணை இடது கரை அமைந்துள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பேசும் பொழுது

''இன்று மாலைக்குள் மேட்டூர் அணை நிரம்பும். நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

டெல்டா பாசனத்திற்கு தேவையை பொறுத்து தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.