தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: நாளைமுதல் சுற்றுப்பயணம்

கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இக்குழு தமிழகம் முழுவதும் சென்று அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கிறது.

News image

கனிமொழி எம்பி

Updated On :4 பிப்ரவரி 2024, 3:58 pm

DIN


கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இக்குழு தமிழகம் முழுவதும் சென்று அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று 3 குழுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினர் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.