வரும் பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றப்பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது.
"இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம்காண பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபித்துள்ளதுபோல, இந்த தேர்தலிலும் நிரூபிக்கும்.
4 மண்டலங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். யார் அதிக தொகுதிகளைத் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல் தான் குழு அமைக்கவுள்ளோம்.
இதையும் படிக்க: 14 + 1 சீட் தரும் கட்சியுடன்தான் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்
பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


