தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழ்நாட்டுக்கு 10 ஆண்டில் ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு: எல்.முருகன்

தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Updated On :8 பிப்ரவரி 2024, 8:18 am

DIN

தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து திமுக தலைமையில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியது:

“திமுக எப்போதும் பழிபோடும் விளையாட்டை விளையாடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்ட பணிகளுக்காக ரூ. 10 லட்சம் கோடி பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். 

பல்வேறு பிரச்னைகளை திசை திருப்புவதற்காக திமுக இதுபோன்ற அரசியலை செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு எதிராக உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.