பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சைதை துரைசாமிக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

மகன் மறைவையொட்டி சைதை துரைசாமியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

News image
சைதை துரைசாமியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
Updated On :14 பிப்ரவரி 2024, 11:21 am

DIN

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மறைவையொட்டி அவரை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஹிமாசல் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று (பிப். 13) தகனம் செய்யப்பட்டது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் கஷாங் நாலா அருகே கடந்த வாரம் (பிப். 4) ஞாயிற்றுக்கிழமை, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சிக்கினார்.

அவரின் கார் ஓட்டுநர் தன்ஜின் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வெற்றியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சென்னை கொண்டுவரப்பட்டது.

சென்னை தியாகராய நகர் அருகேவுள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.