தினமணி தலையங்கத்தை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின்

தினமணியில் வெளியான தலையங்கத்தை, பேரவையில் இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
பேரவையில் முதல்வர்
பேரவையில் முதல்வர்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் இன்று காலை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் வழியில் இயங்குவதால் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என நாமே முழங்கினோம். ஆனால் இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கே வாரி வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லாமல் உலக நாளிதழ்களே பாராட்டி வருகின்றன. அந்த வரிசையில் முதலீட்டாளர் மாநாடு குறித்து தினமணி தலையங்கம் எழுதியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரவையில் முதல்வர்
மா(ஏ)ற்றம் தரும் மாநாடு! முதலீட்டாளா்கள் மாநாடுகுறித்த தலையங்கம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தினால், கர்ப்பக்கிரகத்திலும் சமத்துவம் நுழையத்தொடங்கிவிட்டது. பொருளாதர வளர்ச்சியுடன் சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து வளர்த்து வருகிறோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. அதனால்தான் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய முன்னணிப் பத்திரிகைகளும் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டுகளைப் பெறும் அரசாக திமுக அரசு இயங்கி வருகிறது.

தமிழக தொழில் வளர்ச்சியை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் பாராட்டியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட 2023 வெள்ள பாதிப்பை தமிழக திமுக அரசு சிறப்பாகக் கையாண்டதாக முன்னணி ஆங்கில நாளிதழ் பாராட்டியிருக்கிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்களை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியிருக்கிறது.

தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டை பாராட்டி தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com