தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதித்துறை செயலர் உதயசந்திரன்

நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் கட்டுப்பாடு: செயலர் உதயசந்திரன் உறுதி
தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதித்துறை செயலர் உதயசந்திரன்

தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று நிதித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். சுமார் 2.07 மணி நேரம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் அறிவித்தார். அப்போது, நாட்டின் அனைத்து தளங்களிலும் தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சம் குறித்து நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,95,17 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்தியரப் பதவு துறையில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை. 2 பேரிடர்களுக்கான நிதியும் அரசின் வரி வருவாயில் இருந்து செலவிடப்பட்டது.

10ஆவது நிதிக் குழுவில் 6.64சதவீதமாக இருந்த நிதிப் பகிர்வு 15ஆவது நிதிக் குழுவில் 4.08சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com