3ஆம் பாலினத்தவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்
அரசின் நிதியுதவியுடன் உயர்கல்வியில் முன்னேறும் திருநங்கைகள்


உயர்கல்வி பயில விரும்பும் 3ஆம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்வுக்கென பல்வேறு புதுமையான திட்டங்களை நாட்டிலேயே முன்னோடியாக தமிழநாடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
மூன்றாம் பாலினத்தவரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து, வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது மிககம் இன்றியமையாததாகும். எனினும் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே, உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதலாக அரசால் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...