மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஜய்யுடன் கூட்டணியா? கமல் பதில்

விஜய்யுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

News image
கமல்ஹாசன் - DOTCOM
Updated On :21 பிப்ரவரி 2024, 7:34 am

DIN

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த விழாவுக்கு வருகை தந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது விஜய் முழு நேர அரசியலுக்கு வருவது குறித்தும், அவருடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, ”சினிமாவைவிட்டு முழு நேர அரசியலில் இறங்குவது அவர் இஷ்டம். அது அவரின் பாணி. நான் விஜய்யுடன் ஏற்கெனவே பேசியுள்ளேன், அவர் அரசியலுக்குள் நுழைந்ததும் முதல் வரவேற்பு என்னுடையதாகதான் இருந்தது.” என்று கமல் பதிலளித்தார்.

மேலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இறுதியானவுடன் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கமல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.