/

5 மின்சார ரயில்கள் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப்.26) முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படும்.

News image

மின்சார ரயில்கள் சேவை ரத்து

Updated On :24 பிப்ரவரி 2024, 6:33 pm

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப்.26) முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படும். இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து இரவு செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப்.26) முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, இரவு 8.15, இரவு 8.45, இரவு 8.55, இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, இரவு 9.45, இரவு 10.10, இரவு 10.25, இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். மாா்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, இரவு 8.20, இரவு 8.40, இரவு 9, இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, இரவு 10.10, இரவு 10.35, இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.