தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிா்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என கடந்த ஜனவரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்து, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு மாற்றி அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடா்புடைய விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிா்ணயித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

