சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி!


சீமாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார்.
இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரவிக்குமார் பலியானார். மேலும் அவரது மனைவியும் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...