தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை பாஜக அரசு உறுதி செய்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விமர்சித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள நரேந்திர மோடி, பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான அன்பை வழங்கினர்.
ஈரோடு விவசாயிகளின் சார்பாக எனக்கு மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது. தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கும் நம் அரசின் முடிவுக்கு விவசாயிகளிடம் மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. பழங்குடி மக்களின் பாரம்பரியம்மிக்க சால்வையும் எனக்கு வழங்கப்பட்டது. இதுபோன்ற பாரம்பரியம்மிக்க நமது பொருள்களை சர்வதேச அரங்கில் சந்தைப்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு காளையின் சிலையை நினைவுப்பரிசாகப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு உறுதி செய்தது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.