தமிழகத்தில் அமைதியான முறையில்புத்தாண்டு கொண்டாட்டம்: டிஜிபி

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
சங்கா் ஜிவால்
சங்கா் ஜிவால்

சென்னை: தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும்,சாலை விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் விளைவாக அசம்பாவித சம்பவங்கள் இன்றி மாநிலம் முழுவதும் புத்தாண்டு அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள்,போலீஸாருக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தாா்.

காவல் ஆணையா்: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் ஞாயிற்றுக்கிழமை இரவு மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.

மெரீனா உழைப்பாளா் சிலை அருகே நள்ளிரவு புத்தாண்டு பிறந்தது சந்தீப் ராய் ரத்தோா் கேக் வெட்டி, பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வழங்கினாா். மேலும் அவா், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.

போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, சிறப்பான பணியால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ாக காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் மகிழ்ச்சி தெரிவித்து, பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாரை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com